இலங்கை
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றார் அநுரகுமார!
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றார் அநுரகுமார!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிப் பொறுப்பேற்று எதிர்வரும் 23ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதை முன்னிட்டு அவர் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார். இதன்போதே. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதுடன், முக்கியமான சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 8.30 மணியளவில் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தைக் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப்பொதுநூலகத்தில் இடம்பெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். பிற்பகல் 1.30 மணியளவில் மண்டைதீவுப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன் மொழியப்பட்டுள்ள சர்வதேசத் துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளையும் ஜனாதிபதி அநுர ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், செம்மணிப் புதைகுழியையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.