இலங்கை
யாழ்.கடவுச்சீட்டு அலுவலக இறுதிப்பணிகள் மும்முரம்!
யாழ்.கடவுச்சீட்டு அலுவலக இறுதிப்பணிகள் மும்முரம்!
யாழ்.மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறந்துவைக்கவுள்ள நிலையில் அலுவலகத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்தப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.