சினிமா

ரஜினி கையால் அடிவாங்க வேண்டும்!! எனக்கு கவலை இல்லை.. AK அதிர்ச்சி பேட்டி

Published

on

ரஜினி கையால் அடிவாங்க வேண்டும்!! எனக்கு கவலை இல்லை.. AK அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் தல என கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளிவந்தன.அஜித் கடந்த சில வருடங்களாக சினிமா சார்ந்த எந்த ப்ரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்வது இல்லை. ஆனால், மங்காத்தா படத்தின்போது Print மீடியாவுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார்.அப்போது ரஜினிகாந்த் குறித்து அஜித் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில், “எனக்கு நம்பர் 1, நம்பர் 2 என்பதில் ஈடுபாடு இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியராக ரஜினி சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.நான் ஏகலைவன் போல் இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர்ஸ்டாரை நான் தூரத்தில் இருந்துகொண்டே ரசித்தபடி, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்கும் படத்தில் நான் வில்லனாக நடிக்கவேண்டும்.அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும், இது எப்போது நடக்கிறதோ அன்று எனது சினிமா பயணம் முழுமை அடையும். இது என் லட்சியம். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்”என அஜித் கூறியுள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version