இலங்கை
வடக்கு தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
வடக்கு தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
‘கப்துரு சவிய’ என்ற வடக்கின் தெங்கு செய்கை வேலைத்திட்டம் புதுக்குடியிருப்பு நகரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 16000 ஏக்கரில் தெங்கு செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2027ல் குறித்த அளவை 50000 ஏக்கராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வடக்கு தெங்கு முக்கோண வலயமாக அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் வடக்கில் முதலாவது விதை விவசாய பண்ணை பளை நகரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் அபிவிருத்திகள் குறைந்த மட்டத்தில் இடம்பெறுவதால் இந்த திட்டத்தை யாழிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த வலயத்தில் தெங்கு செய்கைக்கு ஏற்ற நிலமும், காலநிலையும் இருப்பதுடன் மக்கள் செய்கையில் அதிக ஆர்வம் செலுத்தும் சூழலும் இருப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.