இலங்கை

வவுனியாவில் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட மூவர் மருத்துவமனையில்

Published

on

வவுனியாவில் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட மூவர் மருத்துவமனையில்

  வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

Advertisement

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் வவுனியா பிரதான ரயில் நிலையத்தை அடைந்தது அங்கிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி பயணித்தது.

இதன்போது வவுனியா மன்னார் பிரதானவீதியில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் பயணித்த பட்டா வாகனத்தை மோதி தள்ளியது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர், காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

அவர்கள் பயணித்த வாகனம் கடும் சேதத்திற்குள்ளாகியது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

வழமையாக அந்த கடவையூடாக ரயில் செல்லும் போது மூடப்படுகின்ற பாதுகாப்புக்கதவு இன்று மூடப்படாமையினால் இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

விபத்தினால் அரை மணிநேர தாமதத்திற்கு பின்னரே ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version