இலங்கை
4 வாள்களுடன் நால்வர் கைது!
4 வாள்களுடன் நால்வர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கோணாவில் பகுதியில் 4 வாள்கள் மற்றும் போதைப்பொருள்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேகநபர்களை மறித்துப் பொலிஸார் சோதனையிட்டபோது அவர்கள் உடைமையில் மறைத்து வைத்திருந்த 4 வாள்கள் மற்றும் 7 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்களை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.