இலங்கை
இலங்கையின் பிரபல ரெப் பாடகர் மீண்டும் கைது
இலங்கையின் பிரபல ரெப் பாடகர் மீண்டும் கைது
சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் (Rep) பாடகர் மதுவா எனப்படும் மாதவ பிரசாத், மீண்டும் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மூன்று ஜெலிக்னைட் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3.5 கிலோ அம்மோனியா நைட்ரேட் இருந்ததாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கடந்த 25ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுதப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிடிபன, கலஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் சந்தேக நபர் வெடி பொருட்களை புதைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.