சினிமா

கலாச்சாரத்தை பெண்கள் காக்க வேண்டிய அவசியம் இல்லை!! பேட் கேர்ள் இயக்குநர் வர்ஷா பேச்சு..

Published

on

கலாச்சாரத்தை பெண்கள் காக்க வேண்டிய அவசியம் இல்லை!! பேட் கேர்ள் இயக்குநர் வர்ஷா பேச்சு..

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அவருடன் துணை இயக்குநராக பணியாற்றிய வர்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பேட் கேர்ள். இப்படத்தின் டிரைலர் ரிலீஸான போதில் இருந்தே பலரும் கடுமையாக விமர்சித்தும் டீசரை நீக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது.மேலும் படத்தில் பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதால் அதை நீக்கி சென்றார் வாங்கி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தபோது படத்தின் இயக்குநர் வர்ஷா, சில விஷயங்களை பேசினார்.அதில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸானபோது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு கேவலமான குப்பை படம் என்று சொன்னார்கள். அதன்பின் ரோட்டர்டாம் திரைப்படத் திருவிழாவில் படத்தை பார்த்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அதேபோல் இயக்குநர் ராம் சாரும் படத்தை பற்றி பேசினார். அப்போது அப்படத்தின் அங்கீகாரம் கிடைத்தபோது தான் தைரியமானவளாக மாற்றியது.மேலும் பேசிய வர்ஷா, நம் ஊரில், மண்ணையும் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இந்த படத்தை தயாரித்த, டிரைலரை ரீலிஸ் செய்தவர்களின் வீட்டு பெண்களின் புகைப்படத்தை மிகவும் கேவலமாக இணையத்தில் பகிர்ந்திருந்தார்கள்.இதிலிருந்து புரிந்துக்கொள்ளலாம், அவர்களின் அரசியல் நிலைபாடு எப்படிப்பட்டது என்று. அவர்கள் உண்மையில் மனநிலை சரியில்லாதவர்கள், பெண்கள் தேர்வு செய்யும் இடத்தில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை, ஆனால் பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்வதற்கு தகுதியானவர்கள்.பெண்களை பல படங்களில் எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். பாலியல் பண்டமாக படமாக்குவதை பார்த்தும் வருகிறோம், அது கைவிடப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் படத்தி டிரைலரை பார்த்துவிட்டு படம் கலாச்சாரத்தை சீரக்கிறது என்றார்கள்.கலாச்சாரம் தான் பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, பெண்கள் கலாச்சாரத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியமில்லை. கலாச்சாரத்தை காக்க வேண்டிய வேலை எங்களுடையது இல்லை, கடவுளும் கலாச்சாரம் தான் பெண்களை காக்க வேண்டும் என்று வர்ஷா பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சை கேட்டதும், வெற்றிமாறன் உட்பட பலரது பாரட்டி கைத்தட்டினர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version