இலங்கை
காத்திரமான சட்டத்தை உருவாக்கி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள்;
காத்திரமான சட்டத்தை உருவாக்கி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள்;
சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவிப்பு!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தைத் தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபாமஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இரத்துச் செய்யப்படும் அதேநேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச்சட்டத்தையும் முன்னிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றார்.
அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச்செய்வது என்பது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால் செப்ரெம்பர் மாத ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.