இலங்கை

கொழும்பு புறக்கோட்டையில் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

Published

on

கொழும்பு புறக்கோட்டையில் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

கொழும்பு புறநகரப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியது.

பல விற்பனை நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் பதிவு செய்யப்படாத அழகுசாதனப் பொருட்கள் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டன,

Advertisement

இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது என சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரியான லேபிளிங், காலாவதி திகதிகள் அல்லது மூலப்பொருள் விவரங்கள் இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளின் பாரியளவிலான இருப்புகளைக் கண்டறியவும் இந்த தி​டீர் சோதனை வழிவகுத்தன இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாகும் என்றும் தெரிவித்தனர்.

நுகர்வோரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான, உண்மையான மற்றும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவும் நாடு தழுவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புகள் ​தொடரும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

சந்தேகத்திற்கிடமான அல்லது பாதுகாப்பற்ற தயாரிப்புகளை நுகர்வோர் அதிகார சபையின் ஹாட்லைன் 1977 மூலம் தகவல்தருமாறு பொதுமக்களிடம் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version