இலங்கை
செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி
செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணிப் புதைகுழிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார்.
ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் செம்மணிக்குச் செல்வதை அநுர தவிர்த்துள்ளார்.