இலங்கை

ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட திறப்புவிழா கற்களால் எழுந்துள்ள சிக்கல்

Published

on

ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட திறப்புவிழா கற்களால் எழுந்துள்ள சிக்கல்

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது.

ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Advertisement

1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல் துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார்.

அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமை எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது.

Advertisement

அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது.

பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும்.

Advertisement

இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும்.

அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன.

அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம்.

Advertisement

ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும்.

திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும்.

ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version