இலங்கை

நடனமாடிய நபருக்கு நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; மேடையிலேயே பிரிந்த உயிர்

Published

on

நடனமாடிய நபருக்கு நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; மேடையிலேயே பிரிந்த உயிர்

ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ் அப்துல்லா. இவருக்கு வயது 46. 

Advertisement

இந்த நிலையில்,  திருவனந்தபுரத்தில் கேரள சட்டமன்றத்தால் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது அரசு ஊழியர்கள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து  நடனமாடினர்.

அப்போது சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது ஜுனைஸ் அப்துல்லா மயங்கி விழுந்துள்ளார். மேலும் சிறிது நேரத்தில் எழுந்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எழவில்லை.

Advertisement

இதனை கண்டு அதிர்ச்சியடைந் த சக ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவனந்தப்புரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜுனைஸ் அப்துல்லாவிலை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவனந்தபுரம் பொலிஸார் ஜுனைஸ் அப்துல்லா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

மேலும் இச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version