இந்தியா

பி.ஆர்.எஸ். கட்சியில் வெடித்த உட்கட்சிப் பூசல்: சந்திரசேகர் ராவின் மகள் கவிதா சஸ்பெண்ட்

Published

on

பி.ஆர்.எஸ். கட்சியில் வெடித்த உட்கட்சிப் பூசல்: சந்திரசேகர் ராவின் மகள் கவிதா சஸ்பெண்ட்

முன்னாள் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகளும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கே. கவிதா, கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி முடிவு, கவிதா தனது உறவினரான டி. ஹரீஷ் ராவ் மற்றும் பிஆர்எஸ் ராஜ்யசபா எம்.பி. சந்தோஷ் குமார் ஆகியோருக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்த ஒரு நாள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் இந்த ஒழுங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து, கவிதா தனது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கவிதாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் தனது சகோதரர் கே.டி.ஆருக்கு எதிராகவும், பெயர் குறிப்பிடாமல் கவிதா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, சோமா பாரத் குமார் மற்றும் டி. ரவீந்தர் ராவ் தலைமையில், கவிதாவுக்கு அனுப்பிய அறிக்கையில், அவரது சமீபத்திய செயல்பாடுகள் கட்சிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “கவிதாவின் கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் அவரது நடத்தை ஆகியவற்றை கட்சித் தலைமை மிகவும் தீவிரமாக கருதுகிறது. இதன் காரணமாக, கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் உடனடியாக கவிதாவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை, சந்திரசேகர் ராவ் அல்லது கே.டி. ராமா ராவ் ஆகியோரின் கையொப்பத்திற்குப் பதிலாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது.கட்சியின் மூத்த தலைவர்கள் இருவருக்கு எதிராக கவிதா கருத்து தெரிவித்ததில் இருந்து, கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக பிஆர்எஸ் வட்டாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தது. “சந்திரசேகர் ராவின் ஒப்புதலுடன் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உயர் மட்ட ஆலோசனைகள் நடந்தன, அதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.பிஆர்எஸ் கட்சியில் இந்த நாடகங்கள், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காலேஷ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் (KLIP) விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு நாள் கழித்து அரங்கேறியுள்ளன. திங்கள்கிழமை மாலை, கவிதா பத்திரிகையாளர் சந்திப்பில் தனது உறவினர் ஹரீஷ் ராவை கடுமையாக சாடினார். “சந்திரசேகர் ராவைச் சுற்றி இருந்த சிலரின் தவறுகளால் தான் அவரது பெயர் இந்த விசாரணையில் இழுக்கப்படுகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.சந்திரசேகர் ராவுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு ஹரீஷ் ராவ்தான் காரணம் என்றும் கவிதா கூறினார். “ஐந்து ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ராவுக்கு இதில் பங்கு இல்லையா? சந்திரசேகர் ராவ் மீது தற்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்தான் காரணம்” என்றும் கவிதா குறிப்பிட்டார். மேலும், “சந்திரசேகர் ராவ் தெலங்கானா மக்களுக்காக உழைத்தபோது, மெதா கிருஷ்ண ராவ் போன்றவர்கள் தங்களுக்காகவும், செல்வம் சேர்ப்பதற்காகவும் வேலை செய்தனர்” என்றும் கவிதா குற்றம் சாட்டினார்.கவிதாவின் இந்த கருத்துகள் செய்திகளில் ஒளிபரப்பானதும், பிஆர்எஸ் கட்சியின் உயர் தலைவர்கள் சந்திரசேகர் ராவின் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியதாகவும், அவரது அனுமதியுடனே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிஆர்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version