வணிகம்

ITR filing: வருமான வரி கணக்கு தாக்கல்; கடைசி தேதி எப்போது? அபராதம் எவ்வளவு? முழு விபரங்கள்

Published

on

ITR filing: வருமான வரி கணக்கு தாக்கல்; கடைசி தேதி எப்போது? அபராதம் எவ்வளவு? முழு விபரங்கள்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், வரி செலுத்துவோர் செப்.15-ஆம் தேதிக்குள் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கசெப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால், வரி செலுத்துவோர் தாமதமாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். இதற்கான கடைசி தேதி டிச.31, 2025 ஆகும். மதிப்பீட்டு ஆண்டு 2025-26-க்கு (அதாவது, நிதியாண்டு 2024-25) தாமதமாகத் தாக்கல் செய்வோர், பிரிவு 139(4) இன் கீழ் அபராதம் செலுத்திய பிறகு தங்கள் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான அபராதம்வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் கீழ் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், தாமதமாகத் தாக்கல் செய்ய ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான நிகர வருமானம் உள்ளவர்கள் அதிகபட்சமாக ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.காலக்கெடு நீட்டிப்புக்கான காரணம்2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை 31, 2025-லிருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்த காலக்கெடு நீட்டிப்புக்கான காரணம், “மதிப்பீட்டு ஆண்டு 25-26-க்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாலும், கணினி அமைப்புகள் தயாராக எடுக்கப்பட்ட நேரம்” காரணமாகவும் என அறிவித்தது.சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வருமான வரிக் கணக்கைப் செப்.15-க்குள் தாக்கல் செய்யுங்கள். ஒருவேளை காலக்கெடுவைத் தவறவிட்டால், டிசம்பர் 31-க்குள் அபராதம் செலுத்தி அதைத் தாக்கல் செய்யலாம். எனினும், உரிய நேரத்தில் வரி தாக்கல் செய்வது மிகவும் நல்லது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version