பொழுதுபோக்கு
OTT: தலைவன் – தலைவி டூ மார்கன் வரை… ஓ.டி.டி-யில் வியூஸ் அள்ளிய டாப் படங்கள்!
OTT: தலைவன் – தலைவி டூ மார்கன் வரை… ஓ.டி.டி-யில் வியூஸ் அள்ளிய டாப் படங்கள்!
உலகின் எந்த மொழிப் படமாக இருந்தாலும், அதை வீட்டிலிருந்தே பார்ப்பதற்கான வசதியை வழங்கியவை ஓடிடி தளங்களே. இதனால், ரசிகர்களிடையே ஓடிடி மேடைகளின் வரவேற்பும் நாடுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஓடிடி தளங்களின் வேகமான வளர்ச்சியால், திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இது பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை பாதிக்காதபோதிலும், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்வையிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் கடந்த வாரம் மட்டும் 20 லட்சம் வியூஸ்களை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மா என்கிற இந்திப் படம் உள்ளது. கஜோல் நடிப்பில் உருவான மா திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அப்படம் கடந்த வாரத்தில் மட்டும் 22 லட்சம் பார்வைகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வரும் இந்த படத்திற்கு கடந்த வாரத்தில் மட்டும் 24 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு இரண்டாவது இடத்தையும் தமிழ் படம் ஒருங்கிணைத்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படமே அந்த இடத்தை பிடித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கிய இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது மற்றும் கடந்த வாரத்தில் 26 லட்சம் பார்வைகள் பெற்றுள்ளது.அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் முதலிடத்தை கிங்டம் திரைப்படம் தட்டிதூக்கி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். இப்படத்தை கெளதம் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம், கடந்த வாரத்தில் மட்டும் 28 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.