உலகம்
இந்தியப் பயணத்தை இரத்துச்செய்த ட்ரம்ப்!
இந்தியப் பயணத்தை இரத்துச்செய்த ட்ரம்ப்!
குவாட்உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சினையால் ட்ரம்ப் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவிற்கு ட்ரம்ப் 50 வீதவரி விதித்துள்ளதை அடுத்து இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஷங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது இந்தியா பயணத்தை இரத்துச் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.