இலங்கை
உளவுத் தகவல் அடிப்படையில் வடக்கில் காணிகள் விடுவிப்பு; அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு!
உளவுத் தகவல் அடிப்படையில் வடக்கில் காணிகள் விடுவிப்பு; அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு!
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் காணிகளை மீளக்கையளிக்கும் ஜனாதிபதியின் தீர்மானம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதல்ல பாதுகாப்புத்தரப்பின் ஆலோசனைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாட்டில் மீண்டும் போர் ஏற்படாதவாறே நாம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். தேசிய பாதுகாப்பில் நாம் கூடிய கவனம் செலுத்துகின்றோம். நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி நடமாடும் சூழலை உறுதிப்படுத்துவதில் அக்கறை செலுத்துகின்றோம். மக்கள் இனிமேல் போர் என்ற ஒன்றைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. அபிவிருத்தியை மட்டுமே சிந்திக்க வேண்டும் – என்றார்.