இந்தியா
பஞ்சாப் கனமழை; 29 பேர் உயிரிழப்பு!
பஞ்சாப் கனமழை; 29 பேர் உயிரிழப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால், 29 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஞ்சாப் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்கி வருகிறது.
மேலும் வெள்ளத்தால், குருதாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபுர்தலா, பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பல தசாப்தங்களில் பஞ்சாபைத் தாக்கிய மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.