இலங்கை
பொலிஸ் அதிகாரிகளுக்கு விரைவில் இடமாற்றங்கள்!
பொலிஸ் அதிகாரிகளுக்கு விரைவில் இடமாற்றங்கள்!
பல சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றப்படவுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிர்வாகம், குற்றம் மற்றும் போக்குவரத்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித்துறைகள், ஊவா மாகாணம், மேல் மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுதொடர்பான பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைகள் அடுத்த சில நாள்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பொலிஸ்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.