இலங்கை
மருந்துத் தட்டுப்பாடு இப்போது இல்லை; பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவிப்பு!
மருந்துத் தட்டுப்பாடு இப்போது இல்லை; பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவிப்பு!
அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று சுகாதார, ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது- தற்போது அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் மற்றும் செயற்கையாகப் பொருத்தப்படும் கண் வில்லைகளுக்கும் தட் டுப்பாடுகள் கிடையாது. சிலர் குறிப்பிட்ட நிறுவனங்களின் மருந்துகளை மட்டும் தேடும் போது அவை திறந்த சந்தைகளில் இல்லாது இருக்கலாம்- என்றார்.