இந்தியா

மிலாடி நபி: புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

Published

on

மிலாடி நபி: புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி பகுதியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகள்   சாராயக்கடைகள் மூட புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர்  மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள்1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version