இலங்கை

யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

Published

on

யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இணையதள வசதி அண்மைக்காலமாக மந்தமான நிலையில் காணப்படுகிறது.

Advertisement

இதனை சரி செய்யும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று ஆழியவளையில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இதனை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

Advertisement

புற்றுநோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை இதில் நிறுவுவதால் கதிர்வீச்சால் தாம் மேலும்  பாதிக்கப்பட்டு, உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தமது பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டாம் என பிரதேச செயலகம், பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடளித்துள்ளார்

சம்பவ இடத்திற்கு நேற்று  வருகை தந்த பருத்தித்துறை  பிரதேச சபை அதிகாரிகள் குறித்த தொலை தொடர்பு கோபுரம் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டி உரிய முறையில் அனுமதி பெற்ற பின் பணிகளை தொடருமாறும் அதுவரை பணிகளை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தல்  வழங்கிச் சென்றுள்ளனர்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version