உலகம்
ரஷ்யா-இந்தியா உறவு குறித்து பாகிஸ்தான் பிரதமர்!
ரஷ்யா-இந்தியா உறவு குறித்து பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
அப்போது, “டெல்லியுடனான மாஸ்கோவின் உறவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும்
மேலும், “நாங்கள் உங்களுடன் மிகவும் வலுவான உறவுகளை விரும்புகிறோம். இந்த உறவு இந்த பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு பரஸ்பரம் பயனளிக்கும்” என்று அவர் புடினிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா ஏற்பாடு செய்துள்ள மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க புடினும் ஷெரீப்பும் பெய்ஜிங்கிற்கு வந்திருப்பதும் குறிபிடத்தக்கது.[ஒ]