இலங்கை

JVP இக்கு எதிராக நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

Published

on

JVP இக்கு எதிராக நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

ஜே.வி.பியினால் 1970மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் அரசாங்கத்தின் கீழ் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 1971 மற்றும் 88-89 காலகட்டங்களில் ஜே.வி.பி பல பொதுச் சொத்துக்களை அழித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

இந்த விடயத்தில், பேருந்துகள், மின்மாற்றிகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் உள்ளிட்ட பல பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், வங்கிக் கொள்ளைகளும் இடம்பெற்றுள்ளன.

 இது தொடர்பான முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இந்த உண்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, பொதுச் சொத்துக்களை அழிப்பதில் ஈடுபட்ட ஜே.வி.பியினருக்கு எதிராக எதிர்கால அரசாங்கத்தில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டம் செயல்படுத்தப்படும் என்று தயாசிறி ஜயசேகர கூறினார்.

Advertisement

 முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் ஜேவிபிக்கு மன்னிப்பு வழங்கிய போதிலும், அவர்கள் தற்போது அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பல எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளன.

 அதன்படி, எதிர்கால அரசாங்கத்தின் கீழ் ஜேவிபிக்கு எதிராக சட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும்.

Advertisement

1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொது சொத்துச் சட்டத்தில் 1988 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டமைக்கு பதிலளிக்கும் விதமாக பொது சொத்துச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version