உலகம்

“அமெரிக்கா மீது இனி எந்த வரியும் இருக்காது!

Published

on

“அமெரிக்கா மீது இனி எந்த வரியும் இருக்காது!

சீனா மற்றும் பிரேசில் போல இந்தியாவும் அமெரிக்காவை வரிகளால் கொல்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது. அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

Advertisement

உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்தியா தான் உலகில் அதிக வரி விதிக்கும் நாடு. ஆனால் இப்போது அமெரிக்கா  மீது எந்த வரியும் இருக்காது என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும் ” இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் இந்த  முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் வரி விதிப்பு அவசியம். வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம் பேசும் சக்தியை வழங்குகிறது”என்றார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version