இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா!

Published

on

ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் குனார் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாகாணத்தில் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

Advertisement

அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இது நங்கர்ஹார் மாகாணம் நுலாலாபாத்தை மையமாக கொண்டு உருவானது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியாவிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

இதற்கிடையே மலை பிரதேசமான குனார் மாகாணத்தின் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு இருந்தன. 

நிலநடுக்கம் ஏற்பட்டபோது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 

Advertisement

நள்ளிரவு நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிருடன் புதையுண்டனர்.இதுவரை கிடைத்த தகவலின்படி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள்,சானிடைசர்கள்,ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், என விமானம் மூலம் 21 தொன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது என இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version