வணிகம்

வருமான வரி தாக்கல்: கச்சிதமாக கணக்கிட 5 இலவச ‘ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர்’ இங்கே

Published

on

வருமான வரி தாக்கல்: கச்சிதமாக கணக்கிட 5 இலவச ‘ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர்’ இங்கே

வரும் செப்டம்பர் 15, 2025-க்குள் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை உங்கள் வருமான வரியை கணக்கிடவில்லையா? கவலை உங்கள் வரிப் பொறுப்பைக் கணக்கிடவும், சரியான ITR படிவத்தைத் தேர்வு செய்யவும் உதவும் பல ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர் (Tax Calculator) உள்ளன. பெரும்பாலான வரி செலுத்துவோர் தங்கள் உண்மையான வரி பொறுப்பு மற்றும் அதற்கான விலக்குகளைக் கண்டறிவதில் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழலில், இந்த ஆன்லைன் கால்குலேட்டர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு விரைவாகவும், துல்லியமாகவும் உங்கள் வரிகளைக் கணக்கிட உதவும் 5 இலவச ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர் கருவிகளைப் பற்றி பார்க்கலாம்.1. வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டல் கால்குலேட்டர்வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே ஒரு இலவச டாக்ஸ் கால்குலேட்டர் உள்ளது. இது மிகவும் நம்பகமானது. ஏனெனில், இது நேரடியாக அரசு வழங்கும் கால்குலேட்டர். இதில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வருமானம் மற்றும் வரி விலக்கு விவரங்களை உள்ளிட்டு உங்கள் வரி பொறுப்பை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.2. ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர்ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் (FE) ஆன்லைன் வருமான வரி கணக்கு (ITR) வழிகாட்டி பக்கத்தில் உள்ள டாக்ஸ் கால்குலேட்டர் மிகவும் எளிமையானதும், துல்லியமானதும் ஆகும். இதில் உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வீட்டு வாடகைப்படி (HRA), வீட்டுக் கடன் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு உடனடியாக உங்கள் வரியைக் கணக்கிடலாம். பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை இரண்டிலும் எது உங்களுக்கு சிறந்தது என்பதையும் இது காட்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.3. க்ளியர்டாக்ஸ் கால்குலேட்டர் (ClearTax)க்ளியர் டாக்ஸ் ஒரு பிரபலமான வரி தாக்கல் செய்யும் தளம். இதன் கால்குலேட்டர் எளிமையாகவும் பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், புதிய மற்றும் பழைய வரி முறைகளில் உங்கள் வரி எவ்வளவு இருக்கும் என்பதை உடனடியாகத் தெரிவிக்கும். இது சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும்.4. ஹெச்டிஎஃப்சி வங்கியின் டாக்ஸ் கால்குலேட்டர்நீங்கள் வங்கி தளங்களை நம்புபவர் என்றால், ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஆன்லைன் டாக்ஸ் கால்குலேட்டர் ஒரு சிறந்த வழி. இதில் உங்கள் வருமானம், வரி விலக்குகள் மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் குறித்த தகவல்களை எளிதாக உள்ளிட்டு உங்கள் வரியைக் கணக்கிடலாம்.5. க்ரோவ் டாக்ஸ் கால்குலேட்டர் (Groww)க்ரோவ் செயலி மற்றும் இணையதளத்தில் உள்ள டாக்ஸ் கால்குலேட்டர் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமானது. அதன் எளிதான இடைமுகம் மற்றும் உடனடி முடிவுகள் காரணமாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சரியான டாக்ஸ் கால்குலேட்டர் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?டாக்ஸ் கால்குலேட்டர்கள் உங்களுக்கு ஒரு தோராயமான வரி மதிப்பீட்டை மட்டுமே கொடுக்கும். ஆனால், வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக:உதாரணத்திற்கு:ITR-1 (சஹஜ்): ஆண்டு வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ளவர்களுக்கு, மற்றும் சம்பளம், ஒரு வீட்டுச் சொத்து அல்லது பிற மூலங்களில் இருந்து மட்டும் வருமானம் பெறுபவர்களுக்கு.ITR-2: மூலதன ஆதாயங்கள் (பங்குகள்/மியூச்சுவல் ஃபண்ட் விற்பனை) மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு.ITR-3: தொழில் அல்லது வணிக வருமானம் உள்ளவர்களுக்கு.ITR-4 (சுகம்): ஊக வருமானத் திட்டத்தின் கீழ் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு.மறக்க வேண்டாம்!வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2025. இந்தத் தேதியை நீங்கள் தவறவிட்டால், பிரிவு 234F-ன் கீழ் ரூ. 5,000 வரை அபராதம் செலுத்த நேரிடும். மேலும், தாமதமாகத் தாக்கல் செய்தால், வரித் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படும், அத்துடன் வட்டிச் சுமையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஆகவே, சரியான வரி மதிப்பீட்டைக் கணக்கிட்டு, சரியான நேரத்தில் தாக்கல் செய்ய ஆன்லைன் வரி கால்குலேட்டர்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் (FE) இணையதளத்தில் உள்ள வரி கால்குலேட்டர் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? செப்டம்பர் 15-க்கு முன் உங்கள் வரியைக் கணக்கிட்டு, எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யுங்கள்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version