விளையாட்டு
தமிழ் தலைவாஸ்- குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்: பலம்- பலவீனம் என்ன?
தமிழ் தலைவாஸ்- குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்: பலம்- பலவீனம் என்ன?
12 அணிகள் அணிகள் ஆடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள விஸ்வநாத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் 18-வது லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தொடக்கப் போட்டியை வெற்றியுடன் தொடங்கி அந்த அணி, அடுத்த ஆட்டத்தில் யு-மும்பா அணியிடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர தமிழ் தலைவாஸ் அணியினர் கடுமையாக முயல்வார்கள். அதே நேரத்தில, இதுவரை ஆடிய 2 போட்டியிலும் தோல்வி கண்டுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டும். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.