உலகம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி மீது முட்டை வீசிய பெண்கள்

Published

on

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி மீது முட்டை வீசிய பெண்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக் -இ – இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான்கான், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், இம்ரான் கானின் மீதான டொஷாகானா வழக்கின் விசாரணைக்காக ராவல்பிண்டி சிறைக்கு அவரது சகோதரி அலீமாகான் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Advertisement

அப்போதுஅலீமா கானின் மீது 2 பெண்கள் முட்டைகளை வீசினர். இதில் ஒரு முட்டை அவரது கன்னத்தில் விழுந்தது. முட்டையை வீசிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, முட்டையை வீசிய பெண்கள் இருவரும் இம்ரான் கானின் கட்சி ஆட்சி செய்யும், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் அரசு ஊழியர்கள் ஆவார்கள். 

சம்பளம் முறையாக வழங்காதது மற்றும் பிற முறைகேடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை அலீமா கான் புறக்கணித்ததால் அவர் மீது அப்பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர் என்றனர். முட்டைகள் வீசப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version