உலகம்

உக்ரைனின் அரசு கட்டிடம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

Published

on

உக்ரைனின் அரசு கட்டிடம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மறுபுறம் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. 

Advertisement

இதில் கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. 

உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கட்டிடம் உக்ரைனின் அமைச்சரவை கூடும் கட்டிடம் ஆகும்.

Advertisement

மேலும், கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version