இந்தியா
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
புதுச்சேரி அருகே தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் மருது சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி என்ற சக்தி (29). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் தவளக்குப்பம் பகுதியிலிருந்து நல்லவாடு கிராமத்திற்கு 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை ஆட்டோவில் சவாரியாக ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நல்லவாடு ரோடு பிள்ளையார் திட்டு முருகன் கோவில் எதிரே உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு அந்த மாணவியை பேசுவதற்காக வற்புறுத்தி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.வீடு திரும்பிய மாணவி இதனை பெற்றோரிடம் தெரிவித்தார். எனவே இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பாலமுரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.