இந்தியா

புதுச்சேரி சோலை நகர் தூண்டில் முள் வளைவு பணி: மீண்டும் தொடங்க தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

Published

on

புதுச்சேரி சோலை நகர் தூண்டில் முள் வளைவு பணி: மீண்டும் தொடங்க தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு தெற்கு பகுதிகளில் தூண்டில் முன் வளைவு அமைக்க வலியுறுத்தி தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சோலை நகர் வடக்கு -தெற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஆட்சி காலத்தில் 2008-ம் ஆண்டு சுமார் 8.75 கோடி மதிப்பீட்டில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.ஆனால், எதிர்பாராவிதமாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியதால் பணி தடைப்பட்டு தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற் பகுதிகளில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது, ஆனால் முத்தியால்பேட்டை சோலைநகர் வடக்கு -தெற்கு கடலோர பகுதியில் தூண்டில் முள் அமைக்கும் பணி கிடப்பிலே உள்ளது. இதனால் மீனவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி.தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்புகளால் மீனவர்கள் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றனர்.எனவே மீனவர்களின் துயரை துடைக்கும் வகையில் சோலை நகர் தெற்கு வடக்கு பகுதி கடற்கரையில் கிடப்பில் போடப்பட்ட தூண்டில் முள் வளைவு மீண்டும் தொடங்கி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என முத்தியால்பேட்டை தொகுதி திராவிட முன்னேற்றக் கட்சி சார்பாக சோலை நகர் வடக்கு தெற்கு மீனவ பொது மக்களுடன் சேர்ந்து முதலமைச்சரிடம் இடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் சோலை நகர்  தெற்கு பகுதி பஞ்சாயத்தாரும் வடக்கு தெரு மீன மக்களும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version