தொழில்நுட்பம்
Chandra Grahan – Blood Moon Live Updates: சந்திர கிரகணம்; எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது?
Chandra Grahan – Blood Moon Live Updates: சந்திர கிரகணம்; எத்தனை மணிக்கு? எப்படி பார்ப்பது?
அரிய வானியல் நிகழ்வான முழு சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. இந்த வானியல் நிகழ்வின்போது சந்திரன் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் தோன்றும். செப்டம்பர் 7 அன்று, இந்திய நேரப்படி இரவு 2:41 மணிக்கு (அமெரிக்க நேரப்படி மாலை 5:11 மணி) சந்திர கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை அடையும். அதாவது, சந்திரன் முழுமையாக பூமியின் கருநிழலில் மூழ்கிவிடும். இந்த நிலை 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சந்திர கிரகணம் தோன்று நேரம்: மும்பை நேரப்படி (IST): இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:22 மணி வரைசந்திரன் பூமியின் புறநிழலில் நுழைவதோடு கிரகணம் தொடங்குகிறது. சந்திரன் மேலும் நகர்ந்து கருநிழலுக்குள் செல்லும்போது, அதன் மேற்பரப்பில் இருண்ட நிழல் படரும். முழுமைநிலை ஏற்படும்போது, சந்திரன் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இந்நிறம், கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்தது.செப்டம்பர் 7-8 அன்று நிகழும் சந்திர கிரகணம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளிக்கு 2.7 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது. இதனால், சந்திரன் வழக்கமான அளவை விட சற்றே பெரியதாகத் தோன்றும். இது பூமியின் கருநிழல் வழியாக நகரும்போது, செழுமையான மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பி.பி.சி தொகுத்தபடி, இந்தியாவில் நேரங்கள்:இந்திய நேரப்படி இரவு 8:58 – பெனும்பிரல் கிரகணம் தொடங்குகிறதுஇந்திய நேரப்படி இரவு 9:57 – பகுதி கிரகணம் தொடங்குகிறதுஇந்திய நேரப்படி இரவு 11:00 – மொத்த கிரகணம் தொடங்குகிறதுஇரவு 11:41 – அதிகபட்ச கிரகணம்காலை 12:22 – மொத்த கிரகணம் முடிகிறதுகாலை 1:26 – பகுதி கிரகணம் முடிகிறதுகாலை 2:25 – பெனும்பிரல் கிரகணம் முடிகிறதுசந்திர கிரகணத்தை இந்தியாவிலும் கண்டு ரசிக்க முடியும். மும்பை நேரப்படி (IST): இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:22 மணி வரை இந்திய வானில் சந்திர கிரகணம் தோன்றும்.இந்த முழுமை நிலையை பல்வேறு நேர மண்டலங்களில் காண முடியும். உலகின் சுமார் 77% மக்கள் கிரகணத்தின் முழு நிலையைப் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.லண்டன் (BST): இரவு 7:30 முதல் 7:52 மணி வரை,பாரிஸ் (CEST) மற்றும் கேப் டவுன் (SAST): இரவு 7:30 முதல் 8:52 மணி வரை,இஸ்தான்புல், கெய்ரோ, மற்றும் நைரோபி (EEST/EAT): இரவு 8:30 முதல் 9:5 மணி வரை,தெஹ்ரான் (IRST) இரவு 9 முதல் 10:22 மணி வரை.பாங்காக் (ICT): நள்ளிரவு 12:30 முதல் 1:52 மணி வரைபெய்ஜிங் (CST), ஹாங்காங் (HKT), மற்றும் பெர்த் (AWST): அதிகாலை 1:30 முதல் 2:52 மணி வரைடோக்கியோ (JST): அதிகாலை 2:30 முதல் 3:52 மணி வரைசிட்னி (AEST): அதிகாலை 3:30 முதல் 4:52 மணி வரைமுழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. சூரிய கிரகணத்தைப் போல், இதற்கு பிரத்யேக கண்ணாடி, லென்ஸ் அல்லது வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. முழுமைநிலையில் சந்திரனின் சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளி சிதறுவதால் ஏற்படுவதால், அதை வெறும் கண்ணால் தெளிவாகக் காணலாம். பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி மூலம் மேலும் பல விவரங்களைப் பார்க்கலாம்.