வணிகம்
கோவையில் இந்திய அளவிலான ரா மேட் கண்காட்சி: 10 ஆயிரம் தொழில் முனைவோர்கள் பங்கேற்பு
கோவையில் இந்திய அளவிலான ரா மேட் கண்காட்சி: 10 ஆயிரம் தொழில் முனைவோர்கள் பங்கேற்பு
கோவை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்கக்கூடிய, தொழில் துறை சார்ந்த மூலப்பொருட்கள் கண்காட்சியான ‘ரா மேட் இந்தியா 2025’ கோவையில் நடைபெற உள்ளது. கொடிசியா வளாகத்தில் வரும் செப்டம்பர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாபெரும் கண்காட்சி நடைபெற இருக்கிறது.இந்தக் கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ரா மேட் கண்காட்சியின் தலைவர் சரவணகுமார் மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.சிறப்பு அம்சங்கள்:இந்தியாவின் முன்னணி கண்காட்சிகளில் ஒன்றான இதில், பொறியியல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சாரம், மின்னணுவியல், விவசாயம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான மூலப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழில் முனைவோர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இது, ராமேட் கண்காட்சியின் நான்காவது பதிப்பாகும். பெரும் தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், வேதிப் பொருட்கள், மரப் பொருட்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், டூல்ஸ் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் உதிரிபாகத் தொழிற்சாலைகள் எனப் பலதரப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சி, தொழில் துறையினருக்கு மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு சிறந்த தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பி. ரஹ்மான், கோவை மாவட்டம்.