இந்தியா
சட்டப்பேரவை தேர்தல்; தமிழகத்தில் 4 இடங்களில் மாநாடுகளை நடத்துவதற்கு பா.ஜ.க திட்டம்!
சட்டப்பேரவை தேர்தல்; தமிழகத்தில் 4 இடங்களில் மாநாடுகளை நடத்துவதற்கு பா.ஜ.க திட்டம்!
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த கட்சி எதிர்பார்த்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 22 ஆம் திகதி நெல்லையில் பா.ஜ.க பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்றார்.
தற்போது எதிர்வரும் 13 ஆம் திகதி மதுரையில் பூத்கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்பின்னர் ஒக்டோபர் 26 ஆம் திகதி கோவையிலும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சேலத்திலும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தஞ்சாவூரிலும் மாநாடுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திருவண்ணாமலையிலும் ஜனவரி 24 ஆம் திகதி திருவள்ளூரில் பூத் கமிட்டி மாநாடுகள் நடைபெற உள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.