உலகம்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர்

Published

on

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் பெரும்பான்மை இழந்ததால் பிரதமர் ஷிகேருஇஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பொருளாதார வரிப்பாதிப்புகள் காரணமாக ஜப்பானில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக ஜப்பான் மக்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் அரிசிக்கான வரிகளை அமெரிக்கா விதித்ததால் மக்கள் கடும் விசனமடைந்தனர். இதனால் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரதமர், மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அமெரிக்க வரிக்கு மாற்றீடாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அரிசியின் விலை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக ஜப்பானில் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். இதன் காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இரண்டு சபைகளிலும் தோல்வியைச் சந்தித்து லிபரல் ஜனநாயகக் கட்சி, பெரும்பான்மையை இழந்தது. கட்சிக்குள் உள்ளக மோதல்களும் ஆரம்பித்ததனால் கட்சித் தலைவர் பதவியையும் பிரதமர் பதவியையும் தானாகவே துறந்து கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version