வணிகம்
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்: சவரனுக்கு 82 ஆயிரம் நெருங்கியது
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்: சவரனுக்கு 82 ஆயிரம் நெருங்கியது
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் என அனைவரிடையேயும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு, தங்கம் ஒரு அபரிமிதமான ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குப் பிறகு, தங்கம் விலை ஏறுமுகத்தில் மட்டுமே இருந்தது. செப்டம்பர் 4-ஆம் தேதி, ஒரு சவரன் தங்கம் ரூ.78,000-ஐத் தாண்டியது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 6-ஆம் தேதி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 என்ற புதிய சாதனை விலையை எட்டியது. இதன் மூலம், ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்கப்பட்டது.திங்கட்கிழமை (செப்டம்பர் 8) காலை தங்கம் விலை சற்று குறைந்தாலும், மாலையில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிராமிற்கு ரூ.10,060-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80,480-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) மேலும் தொடர்ந்தது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும், ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனையாகி, புதிய வரலாறு படைத்தது.இன்றைய நிலவரம்இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.10,150க்கும், சவரன் ரூ.81,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.