விளையாட்டு
IND vs UAE LIVE Score: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் – ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங்
IND vs UAE LIVE Score: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் – ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) முதல் தொடங்கியது. வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அணியை துபாயில் வைத்து சந்திக்கிறது. நடப்பு சாம்பியனான இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்கவே நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட ஐக்கிய அரபு அமீரக அணி முயலும். அதனால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேரடி ஒளிபரப்புஇன்று நடக்கும் போட்டி உட்பட ஆசிய கோப்பைக்கான அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், சோனி லைவ் (SonyLIV) ஆப் மற்றும் இணையதளத்திலும் போட்டிகளை நேரலையில் காணலாம்.