இந்தியா

ஆங்கிலத்தில் கடையின் பெயர் பலகை: அடித்து நொறுக்கிய புதுச்சேரி தமிழ் மொழி இயக்கத்தினர்

Published

on

ஆங்கிலத்தில் கடையின் பெயர் பலகை: அடித்து நொறுக்கிய புதுச்சேரி தமிழ் மொழி இயக்கத்தினர்

புதுச்சேரி கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ் மொழி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டார்லிங் உள்ளிட்ட கடையில் ஆங்கில மொழி பெயர் பலகை இருந்ததால் அதை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட அனைத்து கடை மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்று தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று தமிழில் பெயர் பலர் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்கள். அப்போது திடீரென்று காமராஜர் சாலையில் உள்ள ஒரு கடையில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை போராட்டக்காரர்கள் திடீரென்று அடித்து நொறுக்கினர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version