உலகம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

Published

on

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரராக ஆகி உள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தி உள்ளார்.

ஆரக்கிள் இணை நிறுவனரின் மொத்த நிகர மதிப்பு எலான் மஸ்க்கின் 385 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது 393 பில்லியன் டாலர்களைத் தொட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

Advertisement

தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளின் பங்குகள் 43 சதவீதம் வரை உயர்ந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் இழந்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஆரக்கிளை இணைந்து நிறுவிய 81 வயதான எலிசன், தற்போது தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளார். அவரது நிகர மதிப்பில் பெரும்பகுதி தரவுத்தள மென்பொருள் நிறுவனத்தில் உள்ளது.

தற்போது எலிசன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version