டி.வி

க்ரிஷ் விஷயத்தில் ஓவர் பில்டப் கொடுக்கும் முத்து..! ரோகிணிக்கு வைக்கப்பட்ட செக்

Published

on

க்ரிஷ் விஷயத்தில் ஓவர் பில்டப் கொடுக்கும் முத்து..! ரோகிணிக்கு வைக்கப்பட்ட செக்

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  முத்துவும்  மீனாவும்  க்ரிஷ்  மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குமாறு  கம்ப்ளைன்ட் கொடுத்தவரின் வீட்டுக்கு செல்லுகின்றனர். ஆனால் அவர்  கொஞ்சம் மனம் இறங்கவில்லை. எனினும்  ஒரு முடிவு காணாமல் இங்கிருந்து செல்வதில்லை என  முத்துவும் மீனாவும் அங்கேயே இருக்கின்றார்கள். காலையிலிருந்து மாலை வரை முத்துக்கு வரும் சவாரிகளையும் மீனாவுக்கு வரும் ஓடர்களையும்  விட்டுவிட்டு க்ரிஷ் வாழ்க்கைக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுமென அவருடைய வீட்டிற்கு வெளியே நிற்கின்றார்கள். இதனை கம்ப்ளைன்ட் கொடுத்தவரின் வீட்டார்களும் பார்த்து கவலைப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து க்ரிஷ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தவர் முத்து, மீனாவை அழைத்து  நாளைக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன், அதுல அவன் வேணும் என்று செய்தானா? இல்ல தெரியாமல் செய்தானா? என்பதை கண்டுபிடிக்கின்றேன். அதற்குப் பிறகு கம்ப்ளைன்ட்  வாபஸ் வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம் என்று முத்து, மீனாவிடம் சொல்லி அனுப்புகிறார்.அதன் பின்பு முத்துவும் மீனாவும்  மகேஸ்வரி வீட்டுக்கு வருகின்றார்கள்.  இதற்கிடையில்   ரோகிணி க்ரிஷிடம் முத்துவும் மீனாவும் வந்தால் நான் உங்களுடன் வரவில்லை, மகேஸ்வரி வீட்டிலே இருக்கின்றேன் என்று சொல்ல வேண்டும் என சொல்ல, அவர் முடியாது என சொல்லுகின்றார்.  இதனால் மீண்டும் க்ரிஷ்க்கு  அடிக்க கை ஓங்குகின்றார். அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் வருவதை பார்த்துவிட்டு ஓடிப் போய் உள்ளே ஒளிந்து கொள்கிறார்.  அதன் பின்பு முத்து க்ரிஷிடம் நம்ம வீட்ட போகலாமா என்று கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version