உலகம்

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு!

Published

on

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார். 

சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version