உலகம்

சார்லி கிரிக் கொலை – 22 வயது தாக்குதல்தாரி கைது

Published

on

சார்லி கிரிக் கொலை – 22 வயது தாக்குதல்தாரி கைது

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31). ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2012ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார்.

Advertisement

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

Advertisement

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version