இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம்! ‎

Published

on

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம்! ‎

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Advertisement

 இதன் போது அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.

 மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அறையில் இருந்து அவர் வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது தங்களது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தற்போது வந்து சென்றவர் யார் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். 

Advertisement

இதுகுறித்து பொலிஸில் புகார் கொடுத்ததுடன் அதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

 மேலும் அவர் வைத்திருந்த தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version