விளையாட்டு
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? பெங்கால் வாரியர்ஸ்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? பெங்கால் வாரியர்ஸ்
12 அணிகள் அணிகள் ஆடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் முதல் கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள் அரங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், புரோ கபடி லீக் தொடருக்கான 30-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸும் மோதுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதனால், இவ்விரு அணிகள் மோதும் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.