இந்தியா

குடிநீரில் கழிநீர் கலப்பு: புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நாம் தமிழர்

Published

on

குடிநீரில் கழிநீர் கலப்பு: புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நாம் தமிழர்

புதுச்சேரியில் குடிநீரில் கழிநீர் கலந்ததை சரி செய்யாமல் உயிரிழப்பிற்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுகுடிநீரில் கழிவுநீர் கலந்ததை அறியாமல்  புதுச்சேரி உருளையன்பேட்டை மற்றும் நெல்லித் தோப்பு  தொகுதியை சார்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட  நபர்கள் தண்ணீரை பருகியதால் உடல் உபாதைக்கு உட்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்காலும் அலட்சியத்தாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், மெத்தன போக்குடன் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சிவக்குமார் உருளையன்பேட்டை தொகுதி ராஜ்கமல், பாலு உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version