வணிகம்
பி.எஃப் பணம் எடுக்க ஏ.டி.எம்., யு.பி.ஐ. வசதி: தீபாவளிக்கு இ.பி.எஃப்.ஓ-வின் மெகா பரிசு!
பி.எஃப் பணம் எடுக்க ஏ.டி.எம்., யு.பி.ஐ. வசதி: தீபாவளிக்கு இ.பி.எஃப்.ஓ-வின் மெகா பரிசு!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்களுக்கு விரைவில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், வருங்கால வைப்பு நிதிக்கணக்கை ஏ.டி.எம், யு.பி.ஐ. உடன் இணைத்து, தேவைப்படும்போது பணத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் வசதி அமலுக்கு வரவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போதைய நடைமுறை என்ன?மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். தற்போது, ஊழியர்கள் அவசர மருத்துவச் செலவுகள், திருமணம், வீட்டுக் கடன், வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், கல்விச் செலவுகள் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்காக ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு, பி.எஃப் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பி.எஃப் கணக்குகள் இருந்தால், அவை ஒரே கணக்கின் கீழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும்.புதிய வசதிகள் என்னென்ன?இ.பி.எஃப்.ஓ, தனது சந்தாதாரர்களுக்கான டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், வரவிருக்கும் புதிய திட்டங்களின்படி,ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்தல்: சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எடுத்துக்கொள்ளலாம்.குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு: ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்தும் யோசனையையும் இ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு (Central Board of Trustees) ஆய்வு செய்யவிருக்கிறது.யு.பி.ஐ. இணைப்பு: வருங்கால வைப்பு நிதிக் கணக்கை யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து, நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஏ.டி.எம் வசதி, சந்தாதாரர்களுக்குச் சேவைகளையும், பணத்தை எடுக்கும் வசதியையும் எளிதாக்குவதற்கான EPFO-வின் நவீனமயமாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இத்திட்டங்கள், வரும் அக்.10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.