விளையாட்டு

ஆசிய கோப்பை 2025: ஆதிக்கத்தை செலுத்துமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Published

on

ஆசிய கோப்பை 2025: ஆதிக்கத்தை செலுத்துமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயின் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியின் ஏ பிரிவில்  நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும் நிலையில் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்  சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது.அதைப் போன்று ஓமன் அணியை பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வென்றது. இந்நிலையில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியினர் இன்று நடைபெறும் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் இன்றைய ஆட்டத்திலும் தங்களது திறமையை  கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா,அக்சர் பட்டேல் ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேவேளையில் பாகிஸ்தானும் முதல் லீக ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக விளையாட இருக்கின்றனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைப்பெறக் கூடாது என அரசியல்கட்சி தலைவர்கள் முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தாலும் இந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி இந்த போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது சோனி லைவ், சோனி ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் யாரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version