உலகம்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு

Published

on

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். 

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 64 ஆயிரத்து 700 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement

இந்த சூழலில் இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கடைசி கோட்டையாக உள்ள காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

Advertisement

தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் அங்குள்ள ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version